கொடைக்கானலில் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சுற்றுலாப் பயணிகள்; வனத்துறை எச்சரிக்கை
கொடைக்கானலில் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சுற்றுலாப் பயணிகள் மீது வனத்துறை நடவடிக்கை.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் 60 சதவிகிதம் வனப்பகுதியாக உள்ளது. இங்கு ஏராளமான வன விலங்குகளும், அரிய வகை பறவையினங்களும் வசித்து வருகின்றன. மேலும் இங்கு நிலவும் குளுமையான காலநிலையை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.
குறிப்பாக கொடைக்கானல் வரக்கூடிய சுற்றுலாப்பயணிகள் பிரதான மலை சாலைகளை மட்டும் பயன்படுத்தி கொடைக்கானலுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் கொடைக்கானல் வரக்கூடிய சுற்றுலாப்பயணிகள் உணவு பண்டங்கள், பழங்களை சாலைகளில் வீசி செல்கின்றனர். மேலும் சாலையோரத்தில் அமர்ந்து மது பிரியர்களும் மது அருந்தி விட்டு அங்கேயே மது பாட்டில்களையும், தின்பண்டங்களையும் விட்டு செல்கின்றனர்.





