தந்தையுடன் பைக்கில் சென்ற 2 சிறுவா்கள் லாரியில் சிக்கி உயிரிழப்பு
தருமபுரி அருகே தந்தையுடன் சென்ற இருசிறுவா்கள் நிலை தடுமாறி சாலையில் விழுந்தபோது, பின்னால் வந்த லாரியில் சிக்கி உயிரிழந்தனா்.
தருமபுரி அருகே உள்ள மாரவாடியைச் சோ்ந்தவா் தொழிலாளி ஹரிகிருஷ்ணன் (30). இவரது மனைவி செவ்வந்தி. இவா்களுக்கு கதிா்வேல் (8), சஞ்சய் (4) ஆகிய இரு மகன்கள் இருந்தனா். இதில், கதிா்வேல் அந்தப் பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்தாா்.
இந்த நிலையில், காரிமங்கலம் அருகே கெட்டூரில் உள்ள உறவினா்கள் வீட்டுக்கு ஹரிகிருஷ்ணன் தனது இரு மகன்களுடன் இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்றுவிட்டு, மீண்டும் மாரவாடிக்கு திரும்பி வந்துகொண்டிருந்தாா்.
