தந்தை கண்ணெதிரே லாரியில் சிக்கி 2 மகன்கள் பலி

தர்மபுரி: தர்மபுரி அருகே, லாரி மோதியதில், தந்தை கண் முன்னே, இரு மகன்கள் கதிர்வேல், 6, சஞ்சய், 3, ஆகியோர் பலியாகினர்.
தர்மபுரி அருகே, மாரவாடி காமராஜ் நகரை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ஹரிகிருஷ்ணன், 30. இவரது மனைவி செவ்வந்தி, 26. தம்பதியின் மகன்கள், கதிர்வேல், சஞ்சய்.
ஹரிகிருஷ்ணன், 'ஹீரோ ஸ்பிளண்டர்' பைக்கில், மகன்களுடன் குண்டலப்பட்டி நோக்கி நேற்று மதியம் சென்றார்.
குண்டலப்பட்டி - மாரவாடி சாலையில் அதிவேகமாக லாரி வந்ததால், ஹரிகிருஷ்ணன் நிலைத்தடுமாறி, சாலையின் இடதுபுறம் விழுந்தார்.
சாலையின் வலதுபுறம் விழுந்த அவரது மகன்கள் மீது லாரி ஏறியதில், உடல் நசுங்கி இருவரும் பலியாகினர். மதிகோன்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.