ஸ்டாலின் ஐ.பி.எஸ்.? இடமாற்ற பின்னணி!
தேர்தல் பிரச்சாரப் பயணத் தின்போதே முதல்வர் ஜோசப் விஜய்யால் பாராட்டு தெரிவிக்கப் பெற்றவர், முதல்வர் கையால் சிறந்த எஸ்.பி.க்கான பதக்கம் பெற்றவர், மாவட்ட மக்களால் கொண்டாடப்படும் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.யை அதிரடியாக இடமாற்றம் செய்து காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது த.வெ.க. அரசின் உள்துறை. "ஸ்டாலின் ஐ.பி.எஸ்.ஸின் இடமாற்ற உத்தரவை மறுபரிசீலனை செய்க' என அதே மாவட்டத்தில் கலகக்குரல் வெடித்துள்ளது. மக்கள் கொண்டாடும் எஸ்.பி. ஸ்டாலின் அந்தளவிற்கு நேர்மையாளரா.?
"தினசரி ஆயிரக்கணக்கில் இங்கிருந்து பெர்மிட் இல்லாமல் கண்மூடித்தனமாக கேரளாவிற்குப் பாய்ந்த கனிம வள லாரிகளை நிறுத்தியது, ஸ்பாக்களை ஒழித்தது, தனியார் பார்களுக்கு சீல் வைத்தது இவைதான் கன்னியாகுமரி மாவட்ட்ட எஸ்.பி. ஸ்டாலின் இடமாற்றத்திற்குக் காரணம். இதற்காக இந்த மாபியாக்கள் பயன்படுத்தியது சமூக வலைத் தளத்தை. ஒரு குறிப்பிட்ட யூ-டியூபில் மொத்தம் ஐந்து வீடியோக்கள் பதிவிடப்பட்டன. அதில் ஒன்று ரீல்ஸ் கதை. எஸ்.பி. ஸ்டாலின் எங்கே தனக்கு தானே ரீல்ஸ் போட்டார்? ஆதாரம் இருக்கா? மக்கள் அவரை பிடித்து போய் அன்பால் வீடியோ போட்டால் அதற்கு அவர் எப்படி பொறுப்பாவார்?
இன்னொன்று கல் குவாரிகளை மூடியது மற்றும் விதி மீறிய தனியார் பார்கள் மீது நடவடிக்கை எடுத்தது குறித்து. இதனால் யாருக்கு நஷ் டம்? பொதுமக்களுக்கா? இல்லை. நஷ்டமெல்லாம் மலையை வெட்டி விற்று, மண்ணை சுரண்டி பணம் பார்த்த அந்த பிசினஸ் மாஃபி யாக்களுக்குதான். அப்படியானால் அந்த மாஃபியாக்களின் வலியைத் தாங்க முடியாமல்தான் இந்த வீடியோக்களா?

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)