Politics
ஸ்டாலின் ஐ.பி.எஸ்.? இடமாற்ற பின்னணி!

தேர்தல் பிரச்சாரப் பயணத் தின்போதே முதல்வர் ஜோசப் விஜய்யால் பாராட்டு தெரிவிக்கப் பெற்றவர், முதல்வர் கையால் சிறந்த எஸ்.பி.க்கான பதக்கம் பெற்றவர், மாவட்ட மக்களால் கொண்டாடப்படும் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி.யை அதிரடியாக இடமாற்றம் செய்து காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது த.வெ.க. அரசின் உள்துறை. "ஸ்டாலின் ஐ.பி.எஸ்.ஸின் இடமாற்ற உத்தரவை மறுபரிசீலனை செய்க' என அதே மாவட்டத்தில் கலகக்குரல் வெடித்துள்ளது. மக்கள் கொண்டாடும் எஸ்.பி. ஸ்டாலின் அந்தளவிற்கு நேர்மையாளரா.?
"தினசரி ஆயிரக்கணக்கில் இங்கிருந்து பெர்மிட் இல்லாமல் கண்மூடித்தனமாக கேரளாவிற்குப் பாய்ந்த கனிம வள லாரிகளை நிறுத்தியது, ஸ்பாக்களை ஒழித்தது, தனியார் பார்களுக்கு சீல் வைத்தது இவைதான் கன்னியாகுமரி மாவட்ட்ட எஸ்.பி. ஸ்டாலின் இடமாற்றத்திற்குக் காரணம். இதற்காக இந்த மாபியாக்கள் பயன்படுத்தியது சமூக வலைத் தளத்தை. ஒரு குறிப்பிட்ட யூ-டியூபில் மொத்தம் ஐந்து வீடியோக்கள் பதிவிடப்பட்டன. அதில் ஒன்று ரீல்ஸ் கதை. எஸ்.பி. ஸ்டாலின் எங்கே தனக்கு தானே ரீல்ஸ் போட்டார்? ஆதாரம் இருக்கா? மக்கள் அவரை பிடித்து போய் அன்பால் வீடியோ போட்டால் அதற்கு அவர் எப்படி பொறுப்பாவார்?
இன்னொன்று கல் குவாரிகளை மூடியது மற்றும் விதி மீறிய தனியார் பார்கள் மீது நடவடிக்கை எடுத்தது குறித்து. இதனால் யாருக்கு நஷ் டம்? பொதுமக்களுக்கா? இல்லை. நஷ்டமெல்லாம் மலையை வெட்டி விற்று, மண்ணை சுரண்டி பணம் பார்த்த அந்த பிசினஸ் மாஃபி யாக்களுக்குதான். அப்படியானால் அந்த மாஃபியாக்களின் வலியைத் தாங்க முடியாமல்தான் இந்த வீடியோக்களா?
கடைசியாக ஸ்டாலினின் எஸ்.பி. மணந்து கொள்ள வுள்ள பெண் குறித்தான வீடியோ. "தனி நபர் வாழ்க்கையில் தலையிடலாமா? என்கின்ற கேள்விகள் எங்களிடம் எழாமல் இல்லை. மக்களுக்கு நல்லது செய்பவனை பாரட்டத்தான் வேண்டும். அதைவிடுத்து அவனை ஒழித்துக் கட்டக்கூடாது. கனிமவள மாஃபியாக்கள் எந்த வடிவத்தில் வந்தாலும், யார் முகமூடியை போட்டு வந்தாலும், குமரி மக்க ளின் ஆதரவு இருக் கும் வரை அவரை வீழ்த்தவே முடியாது'' என்கின்றார் தோவா ளையை சேர்ந்த அபிராமி முருகன்.
2020ம் ஆண்டு பேட்ஜ் அதிகாரியான ஸ்டாலின் ஐ.பி.எஸ். காஞ்சிபுரம் ஆரப்பாக்கத்தை சேர்ந்தவர்.
களப்பயிற்சியாக திருவாரூரில் பணியாற்றிய இவர் முதல் போஸ்டிங் காக காரைக்குடி ஏ.எஸ்.பி.யாக பணியாற்றினார். அதன்பின் கோவை மாநகர் வடக்கின் துணை ஆணையர், அதன் பின் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜனவரி 2025லிருந்து மாவட்ட எஸ்.பி. மாவட்டத்திற்கு வந்த நாள்முதல் தனக்கும், பொது மக்களுக்குமான இடைவெளியை துண்டாடினர். அதன் பயனாக மக்கள் தங்கள் "சகாவாக' எஸ்.பி.யை பார்க்க அனைத்து சட்டவிரோத செயல்களும் மாவட்ட எஸ்.பி.க்கு தெரிய ஆரம்பித்துள்ளது.
"ஒருகாலத்தில் தூசி மண்டலமாகவும் லாரிகளின் அச்சுறுத்தலுடனும் இருந்த கன்னியாகுமரி பகுதிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2024, ஜன -மார்ச் வரை 106 பேர் விபத்தில் இறந்தனர். 2025 அதே காலத்தில் 49 பேர்தான், அதாவது 54% குறைவு. கனிமவளம் ஏற்றி ராஷ் டிரைவிங் செய்த லாரிகள், குடித்துவிட்டு வண்டி ஓட்டியவர்கள், ஹெல்மெட் இல்லாதவர்கள், மீது கடும் நடவடிக்கை எடுத்தார். கனிம வளக்கொள்ளையை தடுப்பதற்காக குமாரபுரம், ஆரல்வாய்மொழி, காணிமடம் மற்றும் அஞ்சுகிராமம் ஆகிய பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் வைத்து கண்காணிக்க லாரி அதிபர்களின் எதிரியானார் எஸ்.பி. ஸ்டாலின். இதற்காக லாரி அதிபர்கள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினர். அவர்கள்தான், இவருக்கு எதிராக இல்லாதது பொல்லாததையும் தூண்டிவிட்டிருக்கலாம்'' என்கின்றார் திக்கணங்கோடு மணிகண்டன்.
பொதுமக்களுடன் அனைத்துக் கட்சியினரும் இடமாற்றம் செய்யப்பட்ட ஸ்டாலின் ஐ.பி.எஸ்.ஸிற்காக குரல் கொடுத்து வருகின்றனர். ஆங்காங்கே குறிப்பிட்ட யூ-டியூபர் மீது புகார்களும் கொடுக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பிரச்சாரப் பயணத்தின் போது கன்னியாகுமரி வந்தார், தற்பொழுதைய முதலமைச்சர் ஜோசப் விஜய். சைக்கிளில் சுற்றி அங்குமிங்கும் கைகாட்டி வாக்கு சேகரித்தவர் அன்று பாதுகாப்பு கொடுத்திருந்த மாவட்ட எஸ்.பி. ஸ்டாலினுக்கு தனியாக சல்யூட் அடித்து நன்றி தெரிவித்தார். பின்னாளில் சிறந்த பணிகளுக்காக பதக்கத்தை எஸ்.பி. ஸ்டாலினுக்கு வழங்கியதையும் நினைவுகூர்கின்றனர் பொதுமக்கள்.
"பள்ளிப் படிப்பைப் பாதியி லேயே கைவிட்ட 600-க்கும் மேற்பட்ட மாணவர்களை மீண்டும் கல்விப் பாதைக்குக் கொண்டுவந்த கன்னியாகுமரி காவல்துறையின் ‘நிமிர்’ திட்டம், பொதுமக்கள் கருத்து மையம் (டன்க்ஷப்ண்ஸ்ரீ எங்ங்க்க்ஷஹஸ்ரீந் ஈங்ய்ற்ழ்ங்) & தீவிர நடை ரோந்து மற்றும் போதை ஒழிப்பு மற்றும் குற்றக் கட்டுப்பாடு ஆகிய திட்டங்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கொண்டு வந்த பெருமை மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் ஐ.பி.எஸ்.ஸையே சாரும் என்றால் அது மிகையல்ல!
"சமீபத்தில் காங்கிரஸை சேர்ந்த செல்வம் என்கின்ற பிரமுகர் எக்ஸ்தளத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் மாணவர்கள் டைம்பாஸ் டாஸ்மாக் பாரில் மது அருந்திக் கொண்டிருக்கின்றனர். இதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட எஸ்.பி. மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரை டேக் செய்து குறிப்பிட்டிருந்தார். அது உண்மை என கண்டறியப்பட்ட நிலையில்... அந்த பாருக்கு சீல் வைக்கப்பட்டது. ஆனால் பின்னாளில்தான் தெரிந்தது, அந்த பார் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் உறவினர் பார் என்று! இதுவும் எஸ்.பி.க்கு எதிராகத் திரும்பியிருக்கிறது'' என்கிறார் மாவட்ட கலால் அதிகாரி ஒருவர்.
மக்கள் நலனுக்காக நேர்மையாகவும், துணிச்சலாகவும் களப்பணியாற்றும் அதிகாரிகளை இதுபோன்று காத்திருப்போர் பட்டியலில் வைப்பது, களத்தில் நிற்கும் ஒட்டுமொத்த நேர்மையான அதிகாரிகளின் மனஉறுதியைக் குலைப்பதாக அமையும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)