இதிலும் அரசியலா விருதுநகரில் தனி தீக்காய சிகிச்சை பிரிவு அமைப்பதில் பல்வேறு சிறப்பு டாக்டர்கள் இருந்தும் கைவிடுவதா
விருதுநகர், செப். 7 – விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் தனியாக 30 படுக்கைகளுடன் தீக்காய
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் தனியாக 30 படுக்கைகளுடன் தீக்காய சிகிச்சை பிரிவு துவங்க தி.மு.க., ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது த.வெ.க., ஆட்சியில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் உள்ளது. மக்கள் பிரச்சனையில் அரசியல் செய்வதால் மக்கள் விரக்தியடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் நடக்கும் ஒவ்வொரு பட்டாசு ஆலை வெடி விபத்துக்களின் போதும் காயமடைந்தவர்களை மேல் சிகிச்சைக்காக சாத்துார், சிவகாசி அரசு மருத்துவமனைகளில் இருந்து எப்போதும் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இங்கு காயமடைந்தவர்களுக்கு எலும்பு முறிவு, நரம்பியல், தீக்காயம் என பல்வேறு பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் உள்ளனர். அறுவை சிகிச்சை செய்ய தேவையான மருத்துவர்களும் உள்ளனர்.


