இந்தியா - திபெத் எல்லை வர்த்தகம்: 6 ஆண்டுகளுக்கு பின் தொடங்கியது
டேராடூன்:இந்தியா - திபெத் இடையே பாரம்பரிய லிபுலேக் கணவாய் எல்லை வழியாக ஆறு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வர்த்தகம் தொடங்கியுள்ளது.
நம் நாட்டின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பிதோரகர் மாவட்ட எல்லையில் இருந்து லிபுலேக் கணவாய் வழியாக சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் நாட்டுக்கு பல நுாறு ஆண்டுகளாக வர்த்தகம் நடந்து வருகிறது. 1962ல் இந்தியா - சீனா இடையே நடந்த போர் காரணமாக லிபுலேக் கணவாய் வழியே திபெத்துக்கான வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
அதன் பின் 1992ல் மீண்டும் இவ்வழியாக வர்த்தகம் நடந்தது. 2019ல் கொரோனா பெருந்தொற்று பரவியதால் லிபுலேக் கணவாய் வழியாக இந்தியா - திபெத் வர்த்தகம் மீண்டும் பாதிக்கப்பட்டது.

