பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்விக் கட்டண உதவி வழங்க வேண்டும் - அன்புமணி
சென்னை,தனியார் கல்லூரிகளின் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் கல்விக் கட்டண உதவி வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரி
தனியார் கல்லூரிகளின் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் கல்விக் கட்டண உதவி வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அன்புமணி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் ஆண்டு கல்விக் கட்டண (Annual Tution Fees) உதவித் தொகையை 4 மடங்கு முதல் 8 மடங்கு வரை உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கப்பட்டுள்ள உதவித்தொகை உயர்வு வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்விக்கட்டண உதவி மறுக்கப்படுவது பெரும் சமூக அநீதியாகும்.
பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி நிலையை உயர்த்தும் வகையில், அரசு கலைக் கல்லூரிகளில் பயில இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், அவர்களின் கட்டணச் சுமையை ஏற்றுக் கொள்ளும் நோக்குடன் ஆண்டு கல்விக் கட்டண உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித் தொகை கடந்த 2011-ம் ஆண்டுக்கு பிறகு உயர்த்தப்படாத நிலையில், இப்போது பி.எஸ்சி, பி.காம் பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு கல்விக் கட்டண உதவி ரூ.2850-லிருந்து, 295 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.11,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எம்.ஏ மாணவர்களுக்கான உதவித் தொகை ரூ.1350-லிருந்தும், எம்.எஸ்சி, எம்.காம் மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.2850-லிருந்து ரூ.12,000 ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது.




