கிரிக்கெட் ரசிகர்களுக்கு குட் நியூஸ்… மீண்டும் களமிறங்கும் ஹர்திக் பாண்டியா..
2027 - இல் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடருக்கு இந்திய அணி தயாராகி வருகிறது
இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்குத் திரும்பத் தயாராகி வருகிறார். ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிராக புதுச்சேரியில் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்தியா 'ஏ' அணியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், அவரது பங்களிப்பு உடற்தகுதிச் சான்றிதழைப் (Fitness Clearance) பெறுவதைப் பொறுத்தே அமையும். 32 வயதான பாண்டியா, ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியபோது முதுகில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு மற்றும் தொடைப் பகுதி காயங்கள் காரணமாகப் பல போட்டிகளில் பங்கேற்கவில்லை.


