எப்படிப் போகும் எதிர்கால அரசியல் தவிப்பில் மாவட்ட அரசியல்வாதிகள்
ஸ்ரீவில்லிபுத்துார்: எதிர்கால அரசியல் போக்கு எப்படி இருக்கும், அது மாவட்டத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும், தங்கள் எதிர்கால அரசியல் வாழ்க்கையை எப்படி கொண்டு செல்வது என்ற மன குழப்பத்தில் விருதுநகர் மாவட்ட அரசியல்வாதிகள் தவித்து வருகின்றனர்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் யாருமே எதிர்பாராத வகையில் த.வெ.க., வெற்றி பெற்று, தி.மு.க. கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவோடு தற்போது ஆட்சி செய்து வருகிறது.
இத்தகைய அரசியல் சூழல் மாநில அளவிலும், தேசிய அளவிலும் பாரம்பரிய கட்சிகளுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியிருந்தாலும், விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை பல ஆண்டுகளாக தி.மு.க., அ.தி.மு.க.வில் பயணித்த கட்சி நிர்வாகிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
