வீட்டிக்கு வெளியில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட மணிப்பூர் பாடகர் - அடித்து கொன்ற ஹோட்டல் ஊழியர்கள்
The incident in Delhi, where hotel staff beat a singer from Manipur to death for objecting to them consuming alcohol outside his residence, has caused shock.
டெல்லியில் வீட்டிற்கு வெளியில் மது அருந்துவதை தட்டிக்கேட்ட மணிப்பூர் பாடகரை ஹோட்டல் ஊழியர்கள் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மணிப்பூரை சேர்ந்த பாடகர் விக்ரம் சிங் என்பவர் டெல்லி அருகில் உள்ள கிலோகரி என்ற கிராமத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். அவரது வீட்டிற்கு அருகில் ஒரு ஹோட்டல் இருக்கிறது. அங்குள்ள விக்ரம் சிங் வீட்டிற்கு வெளியில் அமர்ந்து ஹோட்டல் ஊழியர்களும், டெலிவரி பாய்களும் மது அருந்திக்கொண்டு அதிக சத்தத்துடன் பாடல் கேட்டுக்கொண்டிருந்தனர். இது பாடகர் விக்ரம் சிங்கிற்கு இடையூராக இருந்தது. இதையடுத்து தனது வீட்டிற்கு அருகில் அமர்ந்து மது அருந்தவேண்டாம் என்று விக்ரம் சிங் கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஹோட்டல் ஊரியர்களும், டெலிவரி பாய்களும் சேர்ந்து விக்ரம் சிங்கை சரமாறியாக அடித்து உதைத்தனர். இதில் விக்ரம் சிங் படுகாயம் அடைந்தார். அவரை அவரது மகன் உடனே மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால் அவர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்து போனார்.















/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)

