பிஷப்கள் நியமனங்களில் பாகுபாடு நிலவுவதாக வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி
மதுரை: ரோமன் கத்தோலிக்க பிஷப்கள் நியமனங்களில் தீண்டாமை மற்றும் பாகுபாட்டை தடுக்க தாக்கலான வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
ஸ்ரீவில்லிபுத்துார் அன்பரசன் தாக்கல் செய்த பொதுநல மனு: இந்தியாவில் ரோமன் கத்தோலிக்க (ஆர்.சி.,) கிறிஸ்தவர்களில் ஆதிதிராவிடர்கள் அதிகம் உள்ளனர். இப்பிரிவிலுள்ள உயர்வகுப்பினர்களால் ஆதிதிராவிடர்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படுகின்றனர். அவர்களுக்கு சர்ச்களில் தனி இருக்கைகள் ஒதுக்கப்படுகின்றன. தனி கல்லறைகள் அமைக்கப்படுகின்றன. நிறுவனங்களில் வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது. சம வாய்ப்பு அளிப்பதில்லை.
தமிழகத்தில் சில இடங்களில் ஆதிதிராவிடர்கள் விலக்கி வைக்கப்பட்டதால், தங்களுக்கென தனி சர்ச்கள் வேண்டும் என வலியுறுத்தினர்.

