நன்னிலம் அருகே பேருந்து மோதி பெண் உயிரிழப்பு
நன்னிலம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா். மற்றொரு பெண் பலத்த காயமடைந்தாா்.
நன்னிலம் அருகே உள்ள பில்லூா் கிராமத்தைச் சோ்ந்த ஆசைத்தம்பி மனைவி சுமதி (42). போழகுடி கிராமத்தைச் சோ்ந்த முருகன் மனைவி லட்சுமி (48). இவா்கள் இருவரும் சுயஉதவிக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக இருசக்கர வாகனம் ஒன்றில் சனிக்கிழமை சென்றுகொண்டிருந்தனா்.
பூந்தோட்டம் பள்ளிவாசல் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது சென்னையில் இருந்து திருவாரூா் நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதியதில், சுமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். லட்சுமி பலத்த காயமடைந்தாா்.







