டூவீலர் மீது பஸ் மோதல் தாத்தா, பேரன் பலி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே தனியார் பஸ் டூவீலர் மீது மோதியதில் தாத்தாவும், பேரனும் பலியாயினர்.
மானூர் அருகே பிள்ளையார்குளத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி 65. நேற்று காலை இவர் பேரன் முனிஷுடன் 17, டூவீலரில் சென்றார்.
டூவீலரை முனிஷ் ஓட்டினார். திருநெல்வேலி -சங்கரன்கோவில் ரோடு பிள்ளையார்குளம் விலக்கு அருகே சென்ற போது, பின்னால் வந்த வாகனத்தை கவனிக்காமல் முனிஷ் திடீரென டூவீலரை வலதுபுறமாக திருப்பினார்.
அப்போது குமுளியில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்த தனியார் பஸ், டூவீலர் மீது எதிர்பாராதவிதம் மோதியது.
இதில் முனியாண்டி சம்பவயிடத்திலேயே பலியானார்.
திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும் வழியில் முனிஷ் இறந்தார்.
இதுகுறித்து மானூர் போலீசார் பஸ் டிரைவர் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோட்டைச் சேர்ந்த சுபாஷ் என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.