பின்னடைவு! அழிவை நோக்கி செல்லும் கால்நடை தொழில்: 57.41 சதவீதம் பசுக்கள் எண்ணிக்கை சரிவு
குன்னூர்: நீலகிரியில் கடந்த, 44 ஆண்டுகளில் பசுக்கள் எண்ணிக்கை, 57 சதவீதத்திற்கும் கீழ் குறைந்து, பாரம்பரிய கால்நடை பராமரிப்பு தொழில் வரலாறு காணாத பின்னடைவை நோக்கி செல்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் அதிகார பூர்வ கணக்கெடுப்பு தரவுகளின்படி, 1982ல் 1.08 லட்சமாக இருந்த பசுக்கள் மற்றும் காளைகள் எண்ணிக்கை, 2019ல் 51 ஆயிரத்து 300 என குறைந்து, 52.5 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்தது. இதில், பசுக்கள் மட்டும், 2024 -- 2026 காலகட்ட கள மதிப்பீட்டின்படி பசுக்களின் எண்ணிக்கை,46 ஆயிரமாக சரிந்துள்ளது.
1982 முதல் 2026 வரையிலான,44 ஆண்டுகளில், மாவட்டத்தில், 62 ஆயிரம் பசுக்கள் குறைந்து, ஒட்டுமொத்தமாக, 57.41 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
