திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், முகூர்த்த நாள் என்பதால் நேற்று, 50க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றதால், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னை புறநகரான திருப்போரூரில், மும்மூர்த்தி அம்சம் கொண்ட கந்தசுவாமி கோவில் உள்ளது. அறுபடை வீட்டிற்கு நிகரான இக்கோவிலில், எந்திர முருகன் வழிபாடும் நடைபெறுகிறது.
மதநல்லினிக்க அச்சாரமாக விளங்கும் இக்கோவிலில், திருமண வேண்டுதல் இருப்பதாலும், போக்குவரத்து வசதி இருப்பதாலும், திருப்போரூர் பகுதியில் திருமணம் செய்வோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
