15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ மூலம் தகவல்!
பிரதமரின் ஜன்தன் திட்டத்தின் கீழ், 15.36 கோடிக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை என்பது ஆா்டிஐ மூலம் தெரியவந்துள்ளது.
பிரதமரின் ஜன்தன் திட்டத்தின் கீழ், 15.36 கோடிக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை என்பது தகவல் அறியும் சட்டம் (ஆா்டிஐ) மூலம் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து சந்திரசேகா் கெளா் என்ற சமூக ஆா்வலா் ஆா்டிஐ மூலம் கோரிய தகவலுக்கு மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிதி சேவைகள் துறை அளித்த பதில்: கடந்த ஆக.12-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி பிரதமரின் ஜன்தன் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 59,03,74,907 வங்கிக் கணக்குகள் உள்ளன. அவற்றில் ரூ.3.15 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருப்பு உள்ளது.