மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து!
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே அமைந்துள்ள பழமையான சென்ட்ரல் திரையரங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அருகே மேலக்கோபுர வீதியில் அமைந்துள்ள பழமையான சென்ட்ரல் திரையரங்கில் இன்று மாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
மதுரையின் பழமையான திரையரங்குகளில் ஒன்றாக இருந்து வந்த இந்த திரையரங்கில், கொரோனா காலத்தின்போது திரைப்படங்கள் திரையிடப்படுவது நிறுத்தப்பட்டு திரையரங்கம் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு முன்பாக சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர். உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் பழைய திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு திரையிடப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.



/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)


