Crime, law and justice
மதுரை சென்ட்ரல் தியேட்டர் எரிந்தது

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே மேலக்கோபுரத் தெருவில் உள்ள பழமையான சென்ட்ரல் சினிமா தியேட்டரில் நேற்றிரவு மின்கசிவால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இத்தியேட்டர் 1939ம் ஆண்டு முதல் இயங்கி வந்தது. கொரோனாவிற்கு பிறகு நிரந்தரமாக மூடப்பட்டது. இதைதொடர்ந்து தியேட்டர் வளாகம் வாகன நிறுத்துமிடமாகவும், உள்பகுதி பொம்மை விற்பனை நிறுவனத்தின் கோடவுனாகவும் செயல்பட்டது.
நேற்றிரவு 7:30 மணியளவில் மின்கசிவு காரணமாக கோடவுனில் தீப்பிடித்து பெரும்பகுதி எரிந்தது. பழமையான கட்டடம் என்பதால் சுவரின் ஒருபகுதி இடிந்தது. பாதுகாப்பு கருதி அருகில் உள்ள கட்டடங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். மதுரை நகர், மீனாட்சி கோயில், அனுப்பானடி தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.