பகிங்ஹாம் கால்வாயில் ரூ.10 கோடியில் தடுப்பு சுவர்
அடையாறு: பகிங்ஹாம் கால்வாயில், வலுவிழந்த தடுப்பு சுவரை அகற்றி, 10 கோடி ரூபாயில் புதிய சுவர் கட்டப்பட உள்ளது.
கோட்டூர்புரம் மற்றும் மத்திய கைலாஷ் மேம்பால ரயில் நிலையங்கள் இடையே உள்ள பகிங்ஹாம் கால்வாயின் கிழக்கு திசை தடுப்பு சுவர், வலுவிழந்து உள்ளது.
கனமழை தொடர்ந்து பெய்து கால்வாயில் வெள்ள நீரோட்டம் அதிகரிக்கும்போது, சுவர் உடைந்து, கெனால் பேங்க் சாலை, காந்தி நகர், கோட்டூர்புரம் பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
