மேலுார் =- காரைக்குடி நான்கு வழிச்சாலை செப்., 15ல் போக்குவரத்து அனுமதி
*6 ஆண்டுக்கு பின் திட்டம் நிறைவுதிருப்புத்துார், செப்.12- சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் வழியாக
சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் வழியாக செல்லும் மேலுார் =-காரைக்குடி நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை 338 செப்.15ல் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுகிறது. ரோட்டிற்கான பணிகள் நிறைவேற ஆறு ஆண்டுகளாகியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை எண் :338, நான்கு வழிச்சாலையாக மேலுார் புறவழிச்சாலையில் துவங்கி கீழவளவு,குண்டேந்தல்பட்டி,திருப்புத்துார்,பிள்ளையார்பட்டி,குன்றக்குடி,கரரைக்குடி புறவழிச்சாலை சந்திப்பு வரை செல்கிறது. இந்த ரோட்டில் மேலுார் -திருப்புத்துார் துாரம் 27 கி.மீ.,ஆகவும் திருப்புத்துார்-= காரைக்குடி துாரம் 19 கி.மீ., என மொத்தத்தில் 45.8 கி.மீ.,நீளமுள்ளது. 2020 மார்ச் ல் ரூ.756 கோடி மதிப்பில் இந்த நான்கு வழிச்சாலை திட்டப்பணி துவங்கியது. பின்னர் பல மாற்றங்கள் செய்யப்பட்டு ரூ. 1070 கோடிக்கு திட்டமதிப்பு அதிகரித்தது.
கொரோனா தாக்கம், கோர்ட் நடைமுறைகளால் பணிகள் பாதிக்கப்பட்டு 6 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது திட்டம் நிறைவடைந்துள்ளது.

