சாலைப்பணியை விரைந்து முடிக்க கலெக்டரிடம் மனு
ஈரோடு; முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம், பொது-மக்கள் நல அறக்கட்டளையினருடன் வந்து, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கந்-தசாமியிடம் நேற்று மனு அளித்தார்.
அதன் பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
ஆறு மாதத்துக்கு முன் அன்றைய முதல்வர் ஸ்டாலினால், பெருந்துறை-சென்னிமலை-காங்-கேயம் சாலை நான்கு வழிச்சாலையாக மாற்ற அனுமதி அளித்து, 63 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்-பட்டது. மூன்று மாதம் மட்டுமே பணி நடந்த நிலையில் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சிறு பால பணிகள் நடக்கவில்லை. பெருந்துறையில் இருந்து சென்னிமலைக்கு முன்பு, 20 நிமிடங்களில் செல்ல முடியும்.