சாலைப்பணியை விரைந்து முடிக்க கலெக்டரிடம் மனு
ஈரோடு; முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம், பொது-மக்கள் நல அறக்கட்டளையினருடன் வந்து, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கந்-தசாமியிடம் நேற்று மனு அளித்தார்.
அதன் பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
ஆறு மாதத்துக்கு முன் அன்றைய முதல்வர் ஸ்டாலினால், பெருந்துறை-சென்னிமலை-காங்-கேயம் சாலை நான்கு வழிச்சாலையாக மாற்ற அனுமதி அளித்து, 63 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்-பட்டது. மூன்று மாதம் மட்டுமே பணி நடந்த நிலையில் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சிறு பால பணிகள் நடக்கவில்லை. பெருந்துறையில் இருந்து சென்னிமலைக்கு முன்பு, 20 நிமிடங்களில் செல்ல முடியும்.
தற்போது, 45 நிமிடங்களாகிறது. ஒன்பது மாதத்தில் பணியை முடிக்க அவகாசம் வழங்-கப்பட்டது. தற்போது ஆறு மாதங்களாகி விட்டது. பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று, கலெக்டரிடம் வலியுறுத்தப்
பட்டது.
இதற்கு பதில் அளித்த கலெக்டர், ' தார் விலை, கட்டுமான பொருட்கள் விலை டெண்டர் கோரிய காலத்தில் இருந்ததை விட, தற்போது அதிகரித்து விட்டது. இதனால் கூடுதல் நிதியை ஒப்பந்ததா-ரர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது' என்று பதில்
அளித்தார்.
இவ்வாறு கூறினார்.