கும்பகோணம் மகாமகம்: அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம்!
மகாமகம் திருவிழா குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர், வேளாண் துறை அமைச்சர் பங்கேற்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் வரும் 2028 ஆம் ஆண்டு மகாமகம் திருவிழா நடைபெற உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் நடைபெறும் இந்த விழாவில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விழாவினை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மகாமக கலையரங்கில், 2028 மகா மகம் பெருவிழா தொடர்பான இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சி. ரமேஷ் தலைமையில், தமிழக உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் முன்னிலையில் தற்போது நடைபெற்று வருகிறது.




