மறுக்கப்பட்ட விஐபி தரிசனம்.. சாதாரண வரிசையில் சென்ற சேகர்பாபு!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, வழக்கம்போல் விஐபி தரிசனத்துக்காக வைகுண்ட வாசல் அருகே காத்திருந்தும், கோயில் ஊழியர்கள் யாரும் இல்லாததால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர் சாதாரண பக்தர்களுடன் கியூ லைனில் நின்று உண்ணாமுலை அம்மன் தரிசனம் செய்த சம்பவம் பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கடந்த சில ஆண்டு காலமாக சினிமா பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் விளையாட்டு வீரர்கள் என முக்கிய பிரமுகர்கள் வந்தால் விஐபி தரிசன வரிசையில் அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்வார்கள்.
முன்னாள் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு நேற்று இரவு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தந்தார்.
