கள்ளக்குறிச்சியில் செப்., 19-ல் டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் டி.என்.பிஎஸ்.சி., ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு 19-ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து கலெக்டர் பத்மஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் நேர்முகத் தேர்வு அல்லது பதவிக்கான கொள்குறி வகை தேர்வு 19-ம் தேதி சனிக்கிழமை கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இத்தேர்வினை காலையில் 1,662 பேர் எழுத உள்ளனர். அன்று மாலையில் 3 பேர்களுக்கு விரித்துரைக்கும் வகை-டிஸ்கிரப்டிவ் தேர்வு நடக்கிறது.
தேர்வு எழுதுபவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு பஸ் வசதி, தேர்வு கூடத்திற்கு தடையில்லா மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முற்பகல் தேர்வு எழுதும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு காலை 8:30 மணிக்குள் வர வேண்டும். 9:00 மணிக்கு மேல் தேர்வு கூடத்திற்கு கண்டிப்பாக அனுமதி கிடையாது. மதியம் தேர்வு எழுதும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு பிற்பகல் 1:30 மணிக்குள் வரவேண்டும். பிற்பகல் 2:00 மணிக்கு மேல் கண்டிப்பாக வருபவர்களுக்கு அனுமதி கிடையாது.

