இலுப்பநத்தம் ஊராட்சிக்கு கூடுதல் குடிநீர் கோரிக்கை தினமும் 1.5 லட்சம் லிட்., பற்றாக்குறை
மேட்டுப்பாளையம்: இலுப்பநத்தம் ஊராட்சிக்குட்பட்ட வெங்கட்ராமபுரம், அண்ணா நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளுக்கு போதிய குடிநீர் கிடைக்காததால் மக்கள் அவதிப்படுகின்றனர். தினமும் 1.5 லட்சம் லிட்டர் குடிநீர் கூடுதலாக வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
காரமடை ஊராட்சி ஒன்றியம் இலுப்பநத்தம் ஊராட்சியில் வெங்கட்ராமபுரம், அண்ணா நகர் உட்பட, 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மூலையூரில் பவானி ஆற்றில் இருந்து குடிநீர் எடுத்து, அத்திட்டத்தில் குடிநீர் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில், இலுப்பநத்தம் ஊராட்சிக்கு தினமும் 9 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். ஆனால் ஏழரை லட்சம் லிட்டர் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால், குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
