நடைபாதையை மறைத்த முட்செடிகள் அகற்ற பொதுமக்கள் வேண்டுகோள்
திருவள்ளூர், செப். 17– திருவள்ளூர் – திருத்தணி நெடுஞ்சாலையோரம், நடைபாதையை மறைத்தபடி வளர்ந்துள்ள
திருவள்ளூர் – திருத்தணி நெடுஞ்சாலையோரம், நடைபாதையை மறைத்தபடி வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெரியகுப்பம் பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் – திருத்தணி நெடுஞ்சாலையின் இருபுறமும், பெரியகுப்பத்தில் இருந்து டோல்கேட் – ஊத்துக்கோட்டை சாலை சந்திப்பு வரை, நெடுஞ்சாலை துறையினர் மழைநீர் வடிகால்வாய் அமைத்துள்ளனர்.
மழை காலத்தில், சாலையில் பெய்யும் மழைநீர் எளிதில் வடியும் வகையில், இந்த வடிகால்வாய் கட்டப்பட்டுள்ளது. அந்த வடிகால்வாய்க்கு மேல், பாதசாரிகள் நடக்கும் வகையில், துருப்பிடிக்காத கம்பி தடுப்புடன் நடைபாதையும் அமைக்கப்பட்டு, சிமென்ட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

