நாளை பொது வினியோகதிட்டக் குறைதீர் முகாம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தாலுகா வாரியாக ஒரு கிராமத்தில் நாளை (செப்.,12ல்) பொது வினியோகத் திட்டம் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
ஒவ்வொரு மாதந்தோறும் 2வது சனிக்கிழமை சூழற்சி முறையில் மாவட்டத்தின் அனைத்து தாலுகாக்களிலும் ஒரு கிராமத்தில் பொது வினியோகத் திட்ட குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. இதன்படி நாளை கீழ்கண்ட இடங்களில் காலை 10:00 மணிக்கு பொதுவினியோகத் திட்ட குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
கடலாடி அருகே கருங்குளம் இ–-சேவை மையக் கட்டடத்திலும், கமுதி தாலுகா பெருநாழி ரேஷன் கடை, கீழக்கரை அருகே மங்களேஸ்வரி ரேஷன் கடை, முதுகுளத்துார் தெற்கு உள்வட்டம் பூக்குளம், பார்த்திபனுார் அருகே வாலாங்குடி, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆனந்துார் அருகே சேத்திடல், ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான், பாம்பன் அருகே அக்காள்மடம், திருவாடானை தாலுகா மங்களக்குடி அருகே துத்தாகுடி ஆகிய இடங்களில் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில், மின்னணு ரேஷன் கார்டு விண்ணப்பம் செய்தல், பெயர் சேர்த்தல், பிழைத்திருத்தம், போட்டோ பதிவேற்றம், முகவரி மாற்றம், அலைபேசி எண் பதிவு செய்தல், புதிய ரேஷன் கார்டு, கடைக்கு வரமுடியாத மூத்தக்குடி மக்களுக்கான அங்கீகாரச்சான்று ஆகிய மனுக்கள் வழங்கலாம். ரேஷன் பொருட்கள் வினியோகம் தொடர்பான குறைகளை மக்கள் தெரிவிக்கலாம்.–––


