பொது விநியாக திட்ட குறைகேட்புக் கூட்டம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மற்றும் வாணாபுரம் தாலுகா அலுவலகங்களில் பொது விநியோக திட்ட குறைகேட்பு சிறப்பு முகாம் இன்று நடக்கிறது.
கள்ளக்குறிச்சி மற்றும் வாணாபுரம் தாலுகா அலுவலக செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மற்றும் வாணாபுரம் தாலுகா அலுவலகங்களில் உள்ள குடிமைப்பொருள் பிரிவில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் இன்று 12ம் தேதி குறைகேட்பு சிறப்பு முகாம் நடக்கிறது.
காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறும் இம்முகாமில், ரேஷன் கார்டிபல் புதிய உறுப்பினர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மற்றும் பெயர் மாற்றம், மொபைல் எண் இணைத்தல், குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
எனவே, பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.