கழிப்பிட வசதி குறைபாடு பள்ளி மாணவிகள் அவதி
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் அரசு நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், போதுமான கழிப்பிடங்கள் இல்லாததால், மாணவிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் அண்ணாஜி ராவ் ரோடு பகுதியில் அரசு நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில் 1,200 மாணவிகள் பயில்கின்றனர். இப்பள்ளியில், 16 கழிப்பிடங்கள் உள்ளன. இதில் 6 மட்டுமே உபயோகத்தில் உள்ளன.
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையின் புங்க மர கிளைகள் கழிப்பிட கட்டடத்தை ஆக்கிரமித்துள்ளது. இதில் உள்ள பறவைகளின் எச்சத்தால் துர்நாற்றம் வீசுகிறது.

