கழிப்பிட வசதி குறைபாடு பள்ளி மாணவிகள் அவதி

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் அரசு நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், போதுமான கழிப்பிடங்கள் இல்லாததால், மாணவிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் அண்ணாஜி ராவ் ரோடு பகுதியில் அரசு நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில் 1,200 மாணவிகள் பயில்கின்றனர். இப்பள்ளியில், 16 கழிப்பிடங்கள் உள்ளன. இதில் 6 மட்டுமே உபயோகத்தில் உள்ளன.
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையின் புங்க மர கிளைகள் கழிப்பிட கட்டடத்தை ஆக்கிரமித்துள்ளது. இதில் உள்ள பறவைகளின் எச்சத்தால் துர்நாற்றம் வீசுகிறது.
கழிப்பிடத்திற்கு தண்ணீர் வரும் வாட்டர் டேங்குகள் சேதமடைந்துள்ளன. கழிப்பிட கழிவுநீர் செல்லும் வழிகளை குப்பைகள் அடைத்துள்ளன. இத னால், பள்ளி மாணவிகள் உடல் நல பாதிப்புக்குள்ளாகின்றனர். மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் 3 நாப்கின் எரிக்கும் இயந்திரங்கள் உள்ள நிலையில், அதை முறையாக பயன்படுத்தாத மாணவிகள் சிலர், நாப்கின்களை கழிப்பிட அறைகளிலேயே தூக்கி வீசி செல்கின்றனர். இதனால் துாய்மை பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, மேட்டுப் பாளையம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ரவிசங்கர் கூறுகையி ல், ''மேட்டுப்பாளையம் நகராட்சி பொறியியல் துறை சார்பில் பள்ளியில் தற்போது கூடுதல் கட்டடங்கள் கட்டும் பணி நடக்கிறது. கழிப்பிடம் கட்டுவது, சீரமைப்பது தொடர்பான பணி குறித்து பொறியியல் துறை கவ னித்து வருகிறது,'' என்றார்.