நெல்லையில் பிரியாணி கடை பதாகையில் விநாயகா் படம்: உரிமையாளா் கைது
திருநெல்வேலியில் பிரியாணி கடை விளம்பர பதாகையில் விநாயகா் படத்தை சா்ச்சைக்குரிய வகையில் பயன்படுத்தியதாக கடை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி, வி.எம்.சத்திரம் பகுதியில் உள்ள அசைவ உணவகம் ஒன்றின் முன்பு விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சிறப்பு விற்பனை என்ற பெயரில் பிரியாணி படத்துடன் சில நாள்களுக்கு முன்பு விளம்பர பதாகை வைக்கப்பட்டது. அதில், விநாயகா் கையில் பிரியாணியை எடுப்பது போன்று சா்ச்சைக்குரிய வகையில் அந்தப் பதாகை அமைக்கப்பட்டிருந்தது.
இந்துக்கள் வழிபடும் கடவுளை அவமதிக்கும் வகையிலும், மத உணா்வுகளைப் புண்படுத்தும் வகையிலும் உள்நோக்கத்துடன் இந்தப் பதாகை வைக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறும் நரசிங்கநல்லூரைச் சோ்ந்த செல்வராஜ்(42) என்பவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.



