புதுச்சேரி மது பாட்டில்கள் கடத்திய பெண் கைது
நெல்லிக்குப்பம்:புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வந்த பெண் கைது செய்யப்பட்டார்.
நெல்லிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் குமராபுரத்தில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அழகியநத்தத்தில் இருந்து கடலூர் சென்ற அரசு பஸ்ஸை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பெண் பயணி வைத்திருந்த பையை சோதனை செய்ததில், 80 புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக வழக்கு பதிந்து, மதுபாட்டில்களை கடத்தி வந்த விருத்தாசலம் பவழங்குடியை சேர்ந்த கனகவேல் மனைவி சிந்துஜாவை,38; என்பவரை கைது செய்தனர்.

