Arts, culture, entertainment and media
காரில் மதுபாட்டில்கள் கடத்திய நபர் கைது
வானுார்: காரில் புதுச்சேரி மது பாட்டில்களை கடத்திய நபரை போலீசார் கைது செய்து, 300 மதுபாட்டில்களை பறிமுதல் செய்ததனர்.
கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் நேற்று அதிகாலை அன்னிச்சங்குப்பம் மதுவிலக்கு சோதனைச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேககத்திற்கு இடமான வகையில் அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை நடத்தினர்.
அதில், புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து கார் ஓட்டி வந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர் மரக்காணம் அடுத்த அனுமந்தை கிராமத்தை சேர்ந்த மோகன், 32; என்பதும், உறவினரின் விசேஷத்திற்கு மதுபாட்டில்கள் கடத்தியதும் தெரிய வந்தது.
அதன் பேரில் போலீசார் அவரை கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர். மேலும், அவரிடம் இருந்த 300 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.