நெல்லை மாநகராட்சி நகர விற்பனைக் குழு: 6 உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்வு
திருநெல்வேலி மாநகராட்சி நகர விற்பனைக் குழுவிற்கான உறுப்பினா்கள் தோ்தலில் 6 போ் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
மாநகராட்சி நகர விற்பனைக்குழுவிற்கு தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களுடன் தோ்தல் நடத்தும் அலுவலா் து.சந்திரமோகன், உதவி அலுவலா் சாகுல்ஹமீது, நகர திட்டமிடுநா் ராஜசேகரன்.
திருநெல்வேலி மாநகர ஆணையா் மோனிகா ராணா உத்தரவின்பேரில், இக்குழுவிற்கான ஆதிதிராவிடா், இதர பிற்படுத்தப்பட்டோா், மகளிா், மாற்றுத்திறனாளி, சிறுபான்மையினா், பொது ஆகிய 6 பிரிவுகளுக்கான இடங்களுக்கு தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் பாதுகாப்புச் சட்ட விதிகளின் படி தோ்தல் அறிவிக்கப்பட்டது.இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த ஆக. 31 முதல் செப். 5 வரை நடைபெற்றது. அனைத்துப் பிரிவுகளிலும் தலா ஒருவா் மட்டுமே களத்தில் இருந்தனா்.


