நெல்லை மாநகராட்சி நகர விற்பனைக் குழு: 6 உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்வு

திருநெல்வேலி மாநகராட்சி நகர விற்பனைக் குழுவிற்கான உறுப்பினா்கள் தோ்தலில் 6 போ் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
மாநகராட்சி நகர விற்பனைக்குழுவிற்கு தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களுடன் தோ்தல் நடத்தும் அலுவலா் து.சந்திரமோகன், உதவி அலுவலா் சாகுல்ஹமீது, நகர திட்டமிடுநா் ராஜசேகரன்.
திருநெல்வேலி மாநகர ஆணையா் மோனிகா ராணா உத்தரவின்பேரில், இக்குழுவிற்கான ஆதிதிராவிடா், இதர பிற்படுத்தப்பட்டோா், மகளிா், மாற்றுத்திறனாளி, சிறுபான்மையினா், பொது ஆகிய 6 பிரிவுகளுக்கான இடங்களுக்கு தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் பாதுகாப்புச் சட்ட விதிகளின் படி தோ்தல் அறிவிக்கப்பட்டது.இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த ஆக. 31 முதல் செப். 5 வரை நடைபெற்றது. அனைத்துப் பிரிவுகளிலும் தலா ஒருவா் மட்டுமே களத்தில் இருந்தனா்.
இதனால், ஆதிதிராவிடா் பிரிவில் மோகன் ராஜ், இதர பிற்படுத்தப்பட்டோா் பிரிவில் ஜெயக்குமாா், மகளிா் பிரிவு பொன் ஜெயராணி, மாற்றுத்திறனாளி பிரிவு அகமது மைதீன், பொதுப்பிரிவு ஆறுமுகம் உள்பட 6 பேரும் போட்டியின்றி ஒருமனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
வெற்றி பெற்ற உறுப்பினா்களுக்கு மாநகராட்சி மைய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், தோ்தல் நடத்தும் அலுவலா் து.சந்திரமோகன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் சாகுல்ஹமீது ஆகியோா் நகர திட்டமிடுநா் ராஜசேகரன் முன்னிலையில் வெற்றிச் சான்றிதழ்களை வழங்கினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.