'அண்ணாமலை பல்கலை பொறியியல் புலத்தை ஐ.ஐ.டி-க்கு இணையாக்க வேண்டும்' -டாடா கன்சல்டன்சி சிஇஓ பேச்சு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் முதலாம் ஆண்டு இளநிலைப் பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா பொறியியல் புல கலையரங்கில் நடைபெற்றது.
விழாவுக்கு பொறியியல் புல முதல்வர் பேராசிரியர் சி.ஜி.சரவணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவரும், மும்பை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான தீபேஷ் கிரேன் நந்தா கலந்து கொண்டு முதலாம் ஆண்டு வகுப்புகளை தொடங்கி வைத்தார்.
விழாவில் அவர் மாணவர்களிடம் பேசுகையில், மாணவர்கள் கல்வியை நன்கு புரிந்து கொண்டு ஆர்வத்துடன் பயின்றால், தங்களைப் போலவே உயர்ந்த நிலையை அடைய முடியும் என்றார். மேலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கும், மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்கும் டாடா கன்சல்டன்சி நிறுவனம் தேவையான பயிற்சிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவித்தார்.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)