போலீஸ் செய்திகள்
பெண் தற்கொலை தேனி: கூழையனுாரை சேர்ந்தவர் செல்வி 36. இவருக்கும், கணவர் பிச்சை மணிக்கும் இடையே குடும்ப
தேனி: கூழையனுாரை சேர்ந்தவர் செல்வி 36. இவருக்கும், கணவர் பிச்சை மணிக்கும் இடையே குடும்ப பிரச்னையில் தகராறு ஏற்பட்டது. அப்போது செல்வி வீட்டில் இருந்த டீசலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை குடும்பத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலன் இன்றி செல்வி இறந்தார். மகன் சந்தோஷ் புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
தேனி: சொக்கத்தேவன்பட்டியை சேர்ந்தவர் பிரியா 43. இவரது மகள் 17 வயது சிறுமி. வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. பிரியா புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மூணாறு: சின்னக்கானல் பகுதியை சேர்ந்த முனியாண்டி 53, அவரது சகோதரர் முனீஸ்வரன் 50, இவரது மருமகன் தேவிகுளம் பகுதியை சேர்ந்த பழனி 31, ஆகியோர் காரில் தமிழகம் சென்று விட்டு சின்னகானல் நோக்கி வந்து கொண்டிருந்தனர். கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு அருகே பெரியகானல் பகுதியில் கார் வந்தபோது, எதிரே முணாறில் இருந்து தேனியை நோக்கி சென்ற தமிழக அரசு பஸ்சில் மோதியது.

