பெண் தற்கொலை
தேனி: பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் ரஞ்சிதம் 36. இவர் தனது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவர் பால்பாண்டியன் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.பெண் மாயம்தேனி: பூதிப்புரத்தை சேர்ந்தவர் வைத்தீஸ்வரி 29. கணவருடன் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் அவர் தனது 2 குழந்தைகளுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை. தந்தை குருசாமி புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம் குள்ளப்புரம் நல்லமணி நகரைச் சேர்ந்தவர் முத்து 28. கருக்கோடை பகுதியில் சிறுநீர் கழிக்க சென்றார். இவரை அடையாளம் தெரியாத 4 நபர்கள் மண்வெட்டி, கம்பால் அடித்து காயப்படுத்தினர். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முத்து அனுமதிக்கப்பட்டார். ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கம்பம்: சுருளிப்பட்டி பரவு காவல் தெருவை சேர்ந்தவர் மணிக்குமார் 39, இவரது மனைவி சதுர்த்தியா 23, இவர்களுக்கு சுவஸ்திகா 2 என்ற மகள் உள்ளார். தம்பதியர் குடும்பத்துடன் கேரளா மேப்பாறை என்ற இடத்தில் தங்கி ஏலத்தோட்ட வேலை செய்தனர். ஏலத்தோட்ட வேலைக்கு செல்வது தொடர்பாக கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. செப். 8 காலை தனது குழந்தையுடன் வீட்டை விட்டு சதுர்தியா வெளியேறியுள்ளார். மனைவி, மகளை காணாமல் மணிக்குமார் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார். அவரது உறவினர்சதுர்த்தியாவை குழந்தையுடன், கம்பம் காந்தி சிலை அருகில் பார்த்ததாக கூறியுள்ளார். கம்பத்தில் தேடியும் கிடைக்காததால் தெற்கு போலீரில் புகார் செய்தார். போலீசார விசாரிக்கின்றனர்.
தேனி:கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்த தொழிலாளி லட்சுமணன் 57. இவர் வீரபாண்டிக்கு வேலைக்கு சென்றுவிட்டு, தேனிக்கு டூவீலரில் திரும்பினார். போடேந்திரபுரம் விலக்கு அருகே ரோட்டை கடந்தபோது அவர் மீது காமாட்சிபுரத்தை சேர்ந்த குமரேசன் ஓட்டி சென்ற லாரி மோதியது. இதில் காயம்பட்ட லட்சுமணன், தேனி அரசு மருத்துவ கல்லுாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.