திருவள்ளூர் சாலையில் மண் குவியல் நகராட்சி ஊழியர்கள் அகற்றம்
திருவள்ளூர்: திருவள்ளூர் நகரத்தில், சாலை மைய பகுதி மற்றும் சாலையோரங்களில் குவிந்துள்ள மண் குவியலை, நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
திருவள்ளூர் நகரத்தில் உள்ள பெரியகுப்பத்தில் இருந்து ஜெ.என்.சாலை, நேதாஜி சாலை வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
சவுடு மண் குவாரிகளில் இருந்து மண் ஏற்றி வரும் லாரிகள், அதிகளவில் இச்சாலையில் பயணம் செய்கின்றன. வேகமாக செல்லும் போது, அந்த லாரிகளில் ஏற்றிச் செல்லப்படும் மண், சாலைகளில் பரவி, சாலை மைய தடுப்பு பகுதியிலும், சாலையோரங்களிலும் குவிந்துள்ளது.
