மிஷன் ரங்கீலி மச்லி... அலங்கார மீன் வளர்ப்புக்கு மத்திய அரசின் மானியத் திட்டம்!
அலங்கார மீன் வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கு வழிகாட்ட செல்போன் செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
விவசாயிகள், பயிர்ச் சாகுபடியை மட்டும் சார்ந்தில்லாமல் மாற்று வழியில் வருமானம் பார்ப்பதற்கான ஒரு நல்வாய்ப்பை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. பிரதம மந்திரியின் மீன் வளத் திட்டத்தின் கீழ், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அலங்கார மீன் வளர்ப்புத் துறையை மேம்படுத்த, ‘மிஷன் ரங்கீலி மச்லி’ (Mission Rangeen Machhli -2031) என்ற பெயரில் சிறப்புத் துணைத் திட்டத்தை, கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி, இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், லட்சத்தீவில் துவக்கி வைத்துள்ளார்.
வீட்டின் அழகுக்காகவும், மன அமைதிக்காகவும் வளர்க்கப்படும் வண்ண மீன்களுக்கு (Ornamental Fish) உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் சமீபகாலமாகச் சந்தை வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


