கடந்த ஓராண்டிற்கு மேலாக கிடப்பில் கிடந்த சலவாதி உயர்மட்ட பாலம் கட்டும் பணிக்கு தீர்வு கிடைத்தது: வரும் 21 ம் தேதி பூமிபூஜையுடன் பணிகள் துவக்கம்
திண்டிவனம்: கடந்த ஒராண்டிற்கு மேலாக எந்த வேலையும் நடைபெறாமல் கிடப்பில் கிடந்த, திண்டிவனம்-சென்னை நெடுஞ்சாலை உள்ள சலவாதி உயர்மட்ட பாலம் கட்டும் பணி வரும் 21ம் தேதி பூமி பூஜையுடன் மீண்டும் பணிகள் துவங்க உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சலவாதி பகுதி, தேசிய நெடுஞ்சாலைத்துறை (நகாய்) சார்பில், தொடர் விபத்துக்கள் நடக்கும் இடமாக, பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு கண்டறியப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக சலாவதி பகுதி, தேசிய சாலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டு, ரூ.40 கோடி செலவில் உயர்மட்ட பாலம் அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

