மழைக்கு சேதமடைந்த சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நரசிங்கராயர் சாலை, சிறு மழைக்கே சேதமடைந்து, மழைநீர் தேங்குவதால், மாநகராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் வணிகர் வீதியில் இருந்து, கச்சபேஸ்வரர் கோவில், நெல்லுக்கார தெரு, மேற்குராஜ வீதி உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர், நரசிங்கராயர் சாலை வழியாக சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் மிகுந்த இச்சாலையில், மழையின் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்துள்ளது.

