களையிழந்த குற்றாலம்.. நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!
குற்றால அருவிகளில் நீர்வரத்து குறைவால் ஆண்கள், பெண்கள் ஒரே பகுதியில் குளிப்பதால் சுற்றுலா பயணிகள் அவதி. வெயில் அதிகரித்தால் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்.
குற்றால அருவிகளில் குறைவாக வரும் தண்ணீரில் ஆண்களும், பெண்களும் ஒரே பகுதியில் குளித்துச் செல்லும் நிலையால் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் சீசன் காலங்களில் பிரதான அருவியான குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி புலியருவி, சிற்றருவி பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் ஜூன் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் சீசன் காலமாகும். அப்போது இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து செல்வது வழக்கம்.


