மாவட்ட அளவிலான ஊஷூ போட்டி பரிசளிப்பு விழா
திண்டிவனம்: திண்டிவனத்தில் நடந்த மாவட்ட அளவிலான ஊஷூ போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கேலோ இந்தியா அஸ்மிதா ஊஷூ சிட்டி லீக் அமைப்பின் சார்பில் திண்டிவனம், விழுப்புரம், விக்கிரவாண்டி, மரக்காணம், செஞ்சி, ஒலக்கூர், கிளியனுார் ஆகிய பகுதிகளிலிருந்து 80க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்ற மாவட்ட அளவிலான ஊஷூ போட்டி, கருவம்பாக்கத்திலுள்ள தரம்சந்த் பள்ளியில் நடந்தது.
இந்த போட்டியை லயன்ஸ் சங்கத் தலைவர் முருகன் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். இதில் சண்டா மற்றும் தவுலு ஆகிய இரண்டு பிரிவுகளில் மாணவிகள் பங்கேற்றனர். போட்டிக்கான சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ஜின்ராஜ் தலைமை தாங்கினார்.
