மாவட்ட அளவிலான ஊஷூ போட்டி பரிசளிப்பு விழா
திண்டிவனம்: திண்டிவனத்தில் நடந்த மாவட்ட அளவிலான ஊஷூ போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கேலோ இந்தியா அஸ்மிதா ஊஷூ சிட்டி லீக் அமைப்பின் சார்பில் திண்டிவனம், விழுப்புரம், விக்கிரவாண்டி, மரக்காணம், செஞ்சி, ஒலக்கூர், கிளியனுார் ஆகிய பகுதிகளிலிருந்து 80க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்ற மாவட்ட அளவிலான ஊஷூ போட்டி, கருவம்பாக்கத்திலுள்ள தரம்சந்த் பள்ளியில் நடந்தது.
இந்த போட்டியை லயன்ஸ் சங்கத் தலைவர் முருகன் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். இதில் சண்டா மற்றும் தவுலு ஆகிய இரண்டு பிரிவுகளில் மாணவிகள் பங்கேற்றனர். போட்டிக்கான சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ஜின்ராஜ் தலைமை தாங்கினார்.
இதில் 10 வயதிலிருந்து 15 வயது உடைய மாணவிகள் பங்கேற்றனர். எடை அடிப்படையில் நடந்த போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த போட்டி தேசிய நடுவர் பெரியசாமி, மாநில நடுவர்கள் சூரிய பிரகாஷ், தமிழ்ச்செல்வி ஆகியோர் மேற்பார்வையில் நடந்தது.
இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் நவகோடி நாராயணமூர்த்தி, இணைச் செயலாளர் ஏழுமலை, மாவட்ட பொருளாளர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ,