காஞ்சியில் சகதியான நடைபாதை ‛சிமென்ட் கல்’ பதிக்க வலியுறுத்தல்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் டோல்கேட் பகுதியில் மண் பாதையாக உள்ள நடைபாதை, லேசான மழைக்கே சகதியாக மாறுவதால், ‘சிமென்ட் கல்’ பாதையாக அமைக்க வேண்டும் என, பாதசாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பின்புறம் உள்ள டோல்கேட் பகுதியில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலை உள்ளது. வாகன போக்குவரத்து மற்றும் பாதசாரிகள் அதிகளவு செல்லும் இச்சாலையில், டோல்கேட் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, அண்ணா அவென்யூ வரை, சாலையோரம் உள்ள நடைபாதை மண் சாலையாக உள்ளதால், லேசான மழைக்கே சகதியாக மாறி விடுகிறது.
இதனால், சாலையோரம் நடந்து செல்ல வேண்டிய பாதசாரிகள், சகதி காரணமாக, வாகன போக்குவரத்து நிறைந்த சாலையில் செல்வதால் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.


