அன்பான ரசிகர்களே ரெடியா?சூர்யா - 47 அப்டேட்!
நடிகர் சூர்யாவின் 47-வது திரைப்படத்தின் புதிய அறிவிப்பு...
நடிகர் சூர்யா நடிப்பில் உருவான அவரது 47-வது திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
சூர்யா தன் 47-வது படமாக இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை, சூர்யாவே தன் புதிய தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் மூலம் தயாரித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு கேரளம், சென்னை பகுதிகளில் நடைபெற்று அண்மையில் முழுமையாக நிறைவடைந்ததாக விடியோ வெளியிட்டு அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு சூர்யா - 47 திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டனர். மேலும், இப்படத்திற்கு ‘சீனு’ எனப் பெயரிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)



