Arts, culture, entertainment and media
15 வருடங்களுக்கு பிறகு தீபாவளி ரிலீஸ்; 22 வருடங்களுக்கு பிறகு அமைந்த கூட்டணி- 'Scene' பட ஹைலைட்ஸ்!
'காக்க காக்க', 'சிங்கம்' படங்களைத் தொடர்ந்து 'சீன்' படத்தில் மீண்டும் போலீஸாக சூர்யா! நஸ்ரியா, நஸ்லென் நடிக்கும் படம் நவம்பர் 6 தீபாவளிக்கு ரிலீஸ்! | Suriya plays Inspector Inbaraj in Jithu Madhavan's 'Scene' alongside Nazriya and Naslen. Releasing for Diwali on November 6!

நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார்.
இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் தலைப்பை அறிவித்திருக்கிறார்கள். படத்திற்கு 'சீன்' என டைட்டில் வைத்திருக்கிறார்கள்.
படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்திருந்தது. தீபாவளி ரிலீஸாக இப்படம் நவம்பர் 6-ஆம் தேதி திரைக்கு வருகிறது.
சூர்யாவுக்கும், போலீஸ் கதாபாத்திரங்களுக்கும் நல்ல கெமிஸ்ட்ரி எப்போதும் இருக்கும். 'காக்க காக்க' அன்புச்செல்வம், 'சிங்கம்' துரைசிங்கம், இப்போது 'சீன்' படத்தில் இன்பராஜ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
காவல்துறை மீது அதிக மரியாதை வைத்திருக்கும் சூர்யா சில வருடங்களுக்கு முன்பு 'காஃபி வித் டிடி' நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில், "காவல்துறையினருக்கு ஞாயிற்றுக்கிழமை, தீபாவளி, பொங்கல் என எப்போதும் விடுமுறை கிடையாது.
பாதுகாப்புப் பணிக்குச் செல்லும் காவலர்கள், பிளாட்ஃபாரத்திலேயே படுத்து உறங்குவார்கள், அங்கேயே சாப்பிடவும் செய்வார்கள். இது சம்பளத்திற்காகச் செய்யும் பணி அல்ல. அதுவொரு லவ்!" எனக் குறிப்பிட்டிருப்பார்.
இந்த 'சீன்' படத்தின் இன்னும் சில ஹைலைட்களும் இருக்கின்றன. 15 வருடங்களுக்குப் பிறகு சூர்யாவின் தியேட்டர் தீபாவளி ரிலீஸ் இதுதான்.
இதற்கு முன்பு 'ஏழாம் அறிவு' திரைப்படம் 2011-ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகியிருந்தது. 'பேரழகன்' படத்திற்குப் பிறகு மலையாள இயக்குநருடன் சூர்யா இப்படத்தில் இணைந்திருக்கிறார்.
